பாரிஸ்: ஐஃபில் கோபுரத்துக்கான நுழைவுச்சீட்டு விலையைப் பாரிஸ் நகர மண்டபம் 20 விழுக்காடு உயர்த்தியுள்ளது.
புதிய கட்டணம் அடுத்த மாதத்திலிருந்து நடப்புக்கு வரும்.
ஐஃபில் கோபுரத்துக்கு உடனடிப் புதுப்பிப்புப் பணிகள் தேவைப்படுவதாகவும் இதற்காகவே நுழைவுச்சீட்டு விலை உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது ஐஃபில் கோபுரத்தின் உச்சிக்கு மின்தூக்கியில் செல்ல 29.40 யூரோ (S$43.06) செலுத்த வேண்டும்.
இது ஜூன் 17லிருந்து 35.30 யூரோ ஆக உயர்த்தப்படும்.

