நியூ கலிடோனியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரெஞ்சு சுற்றுப்பயணிகள்

நியூ கலிடோனியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரெஞ்சு சுற்றுப்பயணிகள்

1 mins read
21f6e27f-8b2d-47e3-b2e4-86202abf16e9
கலவரத்தின்போது வாகனங்கள் தீமூட்டப்பட்டன. - படம்: ஏஎஃப்பி

நோமியா: கலவரங்கள் காரணமாக பசிபிக் நாடான நியூ கலிடோனியா பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கிருந்து பிரெஞ்சு சுற்றுப்பயணிகள் வெளியேற்றப்படுவதாக நியூ கலிடோனியாவில் உள்ள பிரெஞ்சுத் தூதரகம் மே 25ல் கூறியது.

நியூ கலிடோனியாவை பிரான்ஸ் ஆட்சி செய்கிறது.

நியூ கலிடோனியாவில் பத்தாண்டுக்கும் மேலாக வசிக்கும் பிரெஞ்சுக் குடிமக்கள் அங்கு நடத்தப்படும் மாநிலத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று பிரெஞ்சு நாடாளுமன்றம் அண்மையில் அறிவித்தது.

இதற்கு நியூ கலிடோனியாவைச் சேர்ந்த பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நியூ கலிடோனியாவின் தலைநகர் நோமியாவில் உள்ள அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், ராணுவ விமானம் மூலம் மே 25ஆம் தேதியன்று பிரெஞ்சு சுற்றுப்பயணிகள் நியூ கலிடோனியாவிலிருந்து ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்துக்குச் சென்றனர்.

அங்கிருந்து அவர்கள் பிரான்சுக்கு விமானம் மூலம் செல்வர் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்