சிறிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி மரணம்

சிறிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி மரணம்

1 mins read
8bb2d6ed-8434-4349-8d29-b2968c5a1ff0
இரண்டாம் உலகப் போர் காலத்து விமானம் ஸ்பிட்ஃபையர் . - கோப்புப் படம்: அன்ஸ்பிளாஷ்

லண்டன்: கிழக்கு இங்கிலாந்தில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் ஆகாயப் படை விமானி உயிரிழந்தார். இச்சம்பவம் சனிக்கிழமை (மே 25) நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.

ஸ்பிட்ஃபையர் என்னும் அந்த இரண்டாம் உலகப் போர் காலத்து விமானம் பிற்பகல் ஒரு மணியளவில் பறந்துகொண்டிருந்தது; சிறிது நேரத்திலேயே அது லிங்கோன்ஷைரில் உள்ள கோனிங்ஸ்பை ஆகாயப் படைத் தளம் அருகே தரையை நோக்கி வேகமாக வந்து விழுந்தது.

உடனடியாக அவசர சேவை ஊழியர்களும் காவல்துறையினரும் அந்த இடத்தை நோக்கி விரைந்து சென்றனர். விமானத்திற்குள் விமானி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

அவரது பெயர் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. விபத்தில் சிக்கிய விமானம் ஒருவர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய சிறிய விமானம் என்று உள்ளூர் காவல்துறையினர் கூறினர்.

ஸ்பிட்ஃபையர் போர் விமானங்களில் பறக்கும் ஆற்றல் கொண்ட ஒருசில விமானங்கள் இன்னும் இயக்கப்படுகின்றன. அவற்றில் ஆறு விமானங்கள் கோனிங்ஸ்பை ஆகாயப் படைக்குச் சொந்தம்.

குறிப்புச் சொற்கள்