ஜெருசலம்: இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள யூத சமய விழாத் தலத்தில் மே மாதம் 26ஆம் தேதியன்று இஸ்ரேலியக் காவல்துறைக்கும் யூத யாத்திரிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூட்ட நெரிசல் காரணமாக மவுண்ட் மெரோனில் 45 பேர் மாண்டனர்.
காஸா போருக்குக் கண்டனம் தெரிவித்து லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளைப் பாய்ச்சுவதால் இவ்வாண்டு அந்த இடத்தை இஸ்ரேலிய அதிகாரிகள் மூடினர்.
இருப்பினும், கடந்த வாரயிறுதியில் அந்த இடத்துக்கு ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் செல்ல முயன்றதாகவும் திரும்பிச் செல்லுமாறு காவல்துறையினர் அவர்களுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் காவல்துறையின் உத்தரவைப் புறக்கணித்து விழா நடைபெறும் இடத்தை அடைந்ததாகக் கூறப்படுகிறது.
அங்கு இருந்த பொருள்களை அவர்கள் சேதப்படுத்தியதுடன் அதிகாரிகளை நோக்கி கற்களை எறிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதில் 19 அதிகாரிகள் காயமடைந்தனர்.
யாத்திரிகர்கள் பலர் காயமுற்றதாக இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
முதியவர் ஒருவரைக் கீழே தள்ளி விட்டதற்காகக் குறைந்தது ஓர் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

