இண்டியானாபலிஸ்: சுழல்காற்று காரணமாக அமெரிக்காவின் டெக்சஸ், அர்கன்சாஸ், ஓக்லஹோமா, கென்டக்கி ஆகிய மாநிலங்களில் குறைந்தது 14 பேர் மாண்டனர்.
நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த சில நாள்களில் வானிலை மோசமடையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இண்டியானாவில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கார் பந்தயம் கனமழை, பலத்த காற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
ஓக்லஹோமா மாநில எல்லைக்கு அருகில், டெக்சஸ் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் சுழல்காற்று வீசியதில் குறைந்தது ஏழு பேர் மாண்டதுடன் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்தனர்.
மாண்டோரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகளும் அடங்குவர் என்று டெக்சஸ் ஆளுநர் கிரேக் எபட் தெரிவித்தார்.

