‘ஏஐ’யைக் கொண்டு நச்சுநிரல்: ஜப்பானிய ஆடவர் கைது

1 mins read
6a89848e-09cc-4952-ac8b-77a982d159ca
கோப்புப் படம்: - ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: இணையத்தில், ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு (ஜெனரேட்டிவ் ஏஐ) தொழில்நுட்பத்தைக் கொண்டு நச்சுநிரலை உருவாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் 25 வயது ஜப்பானிய ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வேலையில்லாத அந்த 25 வயது ஆடவர் ஜப்பானின் கவாசாக்கி நகரைச் சேர்ந்தவர் ஆவார். ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவைக் கொண்டு நச்சுநிரலை உருவாக்குவது தொடர்பான விவகாரம் ஜப்பானில் எழுவது இதுவே முதல்முறை என்று நம்பப்படுகிறது.

அந்நாட்டின் மாநகர காவல்துறைப் பிரிவு (எம்பிடி) திங்கட்கிழமையன்று (மெ 27) சந்தேக நபரான ரியுக்கி ஹயா‌ஷி என்பவரைக் கைது செய்தது. அவர் தனது சொந்தக் கணினியையும் திறன்பேசியையும் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவைத் தவறாகப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் அவர் அவ்வாறு செய்ததாக விசாரணை மேற்கொண்டோர் தெரிவித்தனர்.

ஹயா‌ஷி உருவாக்கிய நச்சுநிரல், பிணைத் தொகையாக மின்னிலக்க நாணயத்தைக் கேட்டு மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆற்றலைக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கிருமியால் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை என்று காவல்துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்