ஹமாஸ் ஏற்றால் இஸ்‌ரேலும் ஏற்கும்; அமெரிக்க எதிர்பார்ப்பு

1 mins read
6c3b53ab-b50c-4802-9bf2-ff8310ba37b2
மில்லியன்கணக்கான பாலஸ்தீன அகதிகள் இருக்கும் ராஃபாவில் இஸ்‌ரேல் தொடர்ந்து வான்தழித் தாக்குதல்களை நடத்துகிறது. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: காஸா போர் நிறுத்த உடன்படிக்கையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டால் இஸ்‌ரேலும் அதை ஏற்றுக்கொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

போர் நிறுத்த திட்டம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் அறிமுகப்படுத்தினார்.

போர் நிறுத்த உடன்படிக்கை மூலம் மனிதாபிமான உதவி அதிகரிக்கப்படும்.

அத்துடன் பாலஸ்தீனக் கைதிகள்-இஸ்‌ரேலியப் பிணைக்கைதிகள் பரிமாற்றமும் நடைபெறும்.

போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முன்பு இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பரிந்துரைக்கு எதிராக இஸ்‌ரேலிய அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர் குரல் எழுப்பியுள்ளனர்.

ராஃபாவில் இஸ்‌ரேல் குண்டுமழை பொழிந்து வரும் நிலையில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்