கடும் வெப்பத்தால் பங்ளாதேஷ் ஆடை உற்பத்தி ஊழியர்கள் பாதிப்பு

கடும் வெப்பத்தால் பங்ளாதேஷ் ஆடை உற்பத்தி ஊழியர்கள் பாதிப்பு

1 mins read
66def262-7d2b-45a2-85c3-dd64abb82fa5
நோய்வாய்ப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

டாக்கா: கடும் வெப்பம் காரணமாக பங்ளாதேஷில் உள்ள ஆடை உற்பத்தி ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரின் உடல்நிலை பாதிப்படைந்துள்ளது.

அதிகரித்துள்ள வெப்பநிலைக்கு ஆலைகளில் பொருத்தப்பட்ட குளிரூட்டிகளால் ஈடுகொடுக்க முடியவில்லை என்று குறைகூறப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாகப் பதிவானது.

நோய்வாய்ப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடும் வெப்பம் காரணமாக ஊழியர்கள் சிலர் நோய்வாய்ப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்கள் வாந்தி எடுத்து சுயநினைவு இழந்தனர்,” என்று தாம்சன் ராய்ட்டர்ஸ் அறநிறுனத்திடம் ஆடை உற்பத்தி ஊழியரான 22 வயது ஐஷா தலுக்டெர் தனிஷா கூறினார்.

குறிப்புச் சொற்கள்