அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பெண் மேயர் படுகொலை

அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பெண் மேயர் படுகொலை

1 mins read
4acc288f-7c7a-4adc-b2d9-d28b13718d69
மெக்சிகோ பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக பார்க்கப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ அதன் பெண் அதிபரைத் தேர்ந்தெடுத்த சில மணிநேரங்களில் மேற்கு மெக்சிகோவில் இருக்கும் ஒரு நகரத்தின் பெண் மேயர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

போட்டியிட்ட வேட்பாளர்கள்மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்கு மத்தியில் நடந்துமுடிந்த மெக்சிகோ அதிபர் தேர்தலுக்குப் பிறகு அந்நாட்டில் பெண் மேயர் ஒருவர் ஜூன் 3ஆம் தேதி கொல்லப்பட்டது அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிச்சோகன் மாநிலத்தில் இருக்கும் கோடிஜா நகரத்தின் மேயரான திருவாட்டி யோலண்டா சான்செஸ் ஃபிகுரோவா, தனது பாதுகாவலருடன் உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அம்மாநில அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

வெள்ளைநிற வேனில் வந்தவர்கள் மேயரையும் அவரது பாதுகாவலரையும் சுட்டதாகவும் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தப் படுகொலைத் தொடர்பாக விசாரணை முடுக்கிவிடப் பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கைத் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்