மவுண்ட் ஃபுஜிக்கு அருகே இருக்கும் பாலத்தைச் சுற்றி உலோக வேலி அமைக்க திட்டம்

1 mins read
74e8c3d2-5187-4304-9752-7dd107aeb176
மவுண்ட் ஃபுஜிக்கு அருகில் இருக்கும் இந்தப் பாலம் ஃபுஜி நகருக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல வாகன ஓட்டிகளுக்கு உதவும் மேம்பாலமாகும். - படம்: இபிஏ

தோக்கியோ: ஜப்பானில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடங்களில் மவுண்ட் ஃபுஜியும் ஒன்று. மவுண்ட் ஃபுஜியைத் தூரத்திலிருந்து படம்பிடிக்க விரும்பும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் சிலர் விதிமுறைகளை மீறி தொல்லை விளைவிப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தோர் புகார் அளித்தனர்.

அதனையடுத்து, சுற்றுப்பயணிகள் மவுண்ட் ஃபுஜியைப் படமெடுக்க முடியாதபடி பல நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டது. அவை அனைத்தும் பலனளிக்காமல் போகவே, மவுண்ட் ஃபுஜியையொட்டி இருக்கும் புகைப்பட இடத்தைச் சுற்றி 1.8 மீட்டர் உயரமுள்ள உலோக வேலியை அமைக்க ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த உலோக வேலி, ஷிசுவோகா மாநிலத்தில் இருக்கும் ஃபுஜி நகரில் உள்ள புஃஜிசன் யுமெனோ ஓஹாஷி அல்லது மவுண்ட் ஃபுஜி ட்ரீம் பாலத்தைச் சுற்றி அமைக்கப்படும் என ஏஎஃப்பி  தெரிவித்துள்ளது.

மவுண்ட் ஃபுஜிக்கு அருகில் இருக்கும் இந்தப் பாலம் ஃபுஜி நகருக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல வாகன ஓட்டிகளுக்கு உதவும் மேம்பாலமாகும்.

இவ்வாண்டு ஜூன் மாதயிறுதிக்குள் அப்பாலத்தைச் சுற்றி உலோக வேலி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்