வாஷிங்டன்: அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள ஃபிரான்சிஸ் ஸ்கோட் கீ பாலம் மீது கப்பல் ஒன்று மோதியதில் அப்பாலம் ஆற்றில் இடிந்து விழுந்தது.
இதில் ஆறு பேர் மாண்டனர்.
இந்தச் சம்பவம் மார்ச் 26ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
ஆற்றில் இடிபாடுகள் இருந்த காரணத்தினால் அவ்வழியாக கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஆற்றில் இருந்த இடிபாடுகளை பாரந்தூக்கிகள் கொண்டு அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
கிட்டத்தட்ட 11 வாரங்களுக்கு 2,000க்கும் மேற்பட்டோர் அப்பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பால்டிமோரில் உள்ள முக்கியமான கப்பல் பயணப் பாதை ஜூன் 10ஆம் தேதி மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

