பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் முதன்முறையாக டெங்கி தடுப்பூசி தயாரித்துள்ளது.
டக்கேடா மலேசியா எனும் மருந்து நிறுவனம் கியூடெங்கா எனும் தடுப்பூசியை செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 11) அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
மலேசியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் புதிய டெங்கி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது, நான்கு வகை டெங்கி கிருமிக்கு எதிராகப் பாதுகாப்பு வழங்கும்.
நான்கு வயது அல்லது அதையும் தாண்டியோர் இந்த டெங்கி தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இருமுறை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
மலேசியாவில் 2023ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டுப் பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் டெங்கி சம்பவங்கள் 86.3 விழுக்காடு அதிகரித்தன. இவ்வாண்டு முதல் காலாண்டில் மட்டும் அந்நாட்டில் 41,565 டெங்கி சம்பவங்கள் பதிவாயின. இந்த காலகட்டத்தில் டெங்கிக்கு ஆளான 28 பேர் மாண்டனர்.
டெங்கிக்குத் தடுப்பூசி நல்ல தீர்வாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டாலும் கடந்த சில ஆண்டுகளாக அதை தயாரிப்பதில் பல சிக்கல்கள் இருந்ததாக அனைத்துலகத் தொற்றுநோய் அமைப்பின் தலைவர் பால் தம்பையா சென்ற மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியிருந்தார்.

