‘எம்டிஎம்ஏ’ கடத்தல்: ஜோகூரில் சிங்கப்பூரர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
74360eb2-00a4-4832-891a-807ce48c3d87
படம்: - பிக்சாபே

ஜோகூர் பாரு: இஸ்கந்தார் புத்ரியில் 58.6 கிலோகிராம் ‘எம்டிஎம்ஏ’ (எக்ஸ்டசி) போதைப்பொருளை விநியோகித்ததாக ஜோகூர் பாருவில் சிங்கப்பூரர்கள் இருவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

புதன்கிழமையன்று (ஜூன் 12) தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு சந்தேக நபர்களான 49 வயது டான் சியாவ் வெய், 36 வயது ஈ சூங் கியாட் இருவரும் தலையை மட்டுமே அசைத்தனர். குற்றச்சாட்டுகள் மாண்டரின் மொழியில் வாசிக்கப்பட்டன.

எக்ஸ்டசி போதைப்பொருளை வைத்திருந்ததாக இரு குற்றச்சாட்டுகள், விநியோகம் செய்ததாக நான்கு குற்றச்சாட்டுகள் ஆகியவற்றையும் டான் எதிர்நோக்குகிறார். ஈ மீது எக்ஸ்டசி போதைப்பொருளை வைத்திருந்தது, விநியோகித்தது என இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மே மாதம் 29ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தாமான் ஹொரைஸன் ஹில்ஸ் வட்டாரத்தில் உள்ள ஜாலான் அன்ஜுங் 8/1 பகுதியில் இருவரும் 58.6 கிலோகிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருளைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. குற்றப் பத்திரிகைகளில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்