$75 பி. சம்பளத் தொகுப்புக்கு பங்குதாரர்கள் ஒப்புதல்: எலான் மஸ்க்

$75 பி. சம்பளத் தொகுப்புக்கு பங்குதாரர்கள் ஒப்புதல்: எலான் மஸ்க்

1 mins read
06e91068-754e-4cd5-8237-db28531e7313
எலான் மாஸ்க் - படம்: ஏஎஃப்பி

சான் ஃபிரான்சிஸ்கோ: டெஸ்லா பங்குதாரர்கள் தனது 56 பில்லியன் யுஎஸ் டாலர் (S$75 பில்லியன்) சம்பளத் தொகுப்புக்கும் அதன் சட்டப்பூர்வ அலுவலகத்தை டெக்சசுக்கு மாற்றவும் வாக்கு அளித்து ஒப்புதல் அளித்துள்ளதாக அதன் இணை நிறுவனரான எலான் மஸ்க் ‘எக்ஸ்’ தளம் வழியாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பெரும் நிறுவனங்களின் வரலாற்றில் இல்லாத சம்பளத் தொகுப்புக்கு பங்குதாரர்கள் ஏகோபித்த ஆதரவு அளித்துள்ளனர். இதனால் டெஸ்லா நிறுவனத்தில் எலோன் மாஸ்கின் எதிர்காலம் குறித்த கவலையை முதலீட்டாளர்களுக்கு போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அந்தச் சம்பளத் தொகுப்பை ரத்து செய்யும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அவர் போராட வேண்டியுள்ளது.

டெலவர் நீதிபதியை நம்பவைக்கவும் அவர் நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது.

டெஸ்லா பங்குதாரர்களின் ஒப்புதலை டெலவர் நீதிமன்றம் அனுமதிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று யுனிவர்சிட்டி கலிஃபோர்னியா பெர்கிலி சட்டப் பேராசிரியர் ஆடம் படாவி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்