பூமியின் உள்மையம் சுழலும் வேகம் 2010ஆம் ஆண்டு முதல் குறைந்துள்ளதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘நேச்சர்’ சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பூமியின் மேற்பரப்புடன் ஒப்பிடுகையில் உள்மையத்தின் சுழற்சி வேகம் மெதுவடைந்தது குறித்துத் தெளிவான ஆதாரம் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் பூமியில் ஒரு நாளின் நீளம் மாற்றமடையக்கூடும் என்று அவர்கள் கூறினர். ஒரு நாளின் நீளத்தில் ஒரு வினாடியில் சிறு பகுதி அளவு மாற்றம் ஏற்படக்கூடும்.
பூமியின் உள்மையம் இரும்பு, நிக்கல் ஆகியவற்றாலான பந்தைப் போன்றது. இதை நேரடியாக அணுகுவது கடினம் என்பதால் நிலநடுக்கங்களின்போது வெளிப்படும் அலைகளின் பதிவுகளைக் கொண்டு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்வர்.
அத்தகைய வழக்கமான ஆய்வின்போது இந்த மாற்றம் குறித்துக் கோடிகாட்டிய நிலநடுக்கப் பதிவு தம்மை வியப்பில் ஆழ்த்தியதாகக் கூறினார் அமெரிக்காவின் தென்கலிஃபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் விடேல்.
தொடர்ந்து 24 பதிவுகள் அதே ஆதாரத்தைக் கொண்டிருந்ததால் அதை உறுதிசெய்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வில் 1991 முதல் 2023ஆம் ஆண்டுவரை ஒரே இடத்தில் ஏற்பட்ட 121 நிலநடுக்கங்கள் தொடர்பான தரவுகள் ஆராயப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
தென் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள சவுத் சேண்ட்விச் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் தரவுகள் அவை.


