1எம்டிபி மோசடி: ஆடம்பர பொருட்களை விற்க மாட்டேன் என ரோஸ்மா உத்தரவாதம்

1எம்டிபி மோசடி: ஆடம்பர பொருட்களை விற்க மாட்டேன் என ரோஸ்மா உத்தரவாதம்

1 mins read
9dc3f35b-3917-4884-ac0e-3d4871eeb044
ரோஸ்மாவின் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கூறப்படும் 11,991 நகைகள், 400க்கும் மேற்பட்ட ஆடம்பர கைப்பைகள், 300க்கும் மேற்பட்ட கைக் கடிகாரங்களை முடக்க மலேசிய மேம்பாட்டுக் கழகம் (1எம்டிபி) நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர்.

1எம்டிபி மோசடியில் தொடர்புடைய 346 மில்லியன் அமெரிக்க டாலர் (S$468 மில்லியன்) மோசடி வழக்கை மலேசிய மேம்பாட்டுக் கழகம் திருவாட்டி ரோஸ்மாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் பதிவுசெய்துள்ளது.

அந்த மோசடியோடு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் திருவாட்டி ரோஸ்மாவுக்குச் சொந்தமான பிரத்யேக வடிவமைப்புடைய கைப்பைகள், நகைகள்,பிற ஆடம்பரப் பொருள்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தவோ விற்கவோ மாட்டேன் என அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் ஜூன் 14ஆம் தேதி திருவாட்டி ரோஸ்மா உறுதியளித்துள்ளார்.

அந்நாட்டு நீதித்துறை ஆணையர் அட்லின் அப்துல் மஜித் முன்னிலையில் அவரது வழக்கறிஞர்கள் ரேசா ரஹீம், முஹம்மது ஷஃபீ அப்துல்லா ஆகியோர் காணொளி மூலம் இந்த உத்தரவாதத்தை அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்