பெட்டாலிங் ஜெயா: நாடு முழுவதும் கிரேட் ‘ஏ’, ‘பி’, ‘சி’ வகை முட்டை விலை மூன்று காசு குறைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அறிவித்துள்ள புதிய மானியத் திட்டத்தின் ஒரு பகுதியாக முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அன்வார் இப்ராகிம், “கிரேட் ஏ, பி, சி முட்டைகளின் புதிய விலைகள் முறையே 42 காசு (சிங்கப்பூர் 12 காசு), 40 காசு, 38 காசுக்கு என்று நிர்ணயிக்கப்படுகிறது,” என்று கூறியிருந்தார்.
“முட்டைகளுக்கு வழங்கப்படும் மானியத்தால் அரசாங்கத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் ஒரு முட்டைக்கு பத்து காசு வரை அரசாங்கம் மானியம் வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“மக்களின் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகள், அது தொடர்பான விவகாரங்களை அரசாங்கம் முனைப்புடன் கவனித்து பயனுள்ள வகையில் நடவடிக்கை எடுக்கும்,” என்றும் அவர் ஜூன் 17ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் உறுதியளித்திருந்தார்.
சாபா, சரவாக், லபுவான் ஆகிய இடங்களில் முட்டைகளுக்கான சில்லறை விலை அந்தந்த வட்டாரங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

