ஹனோய்: வியட்னாமில் ஐந்து கடலடி இணையத் தொடர்பு கம்பிவடங்களில் மூன்று செயலிழந்துவிட்டதாக அந்நாட்டின் உள்ளூர் அதிகாரபூர்வ ஊடகம் தெரிவித்தது. இது, ஓராண்டிற்குள் நாட்டில் ஏற்பட்டுள்ள இரண்டாவது பெரிய பிரச்சினையாகும்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவுடன் மூன்று கேபிள்கள் வியட்னாமை இணைக்கின்றன. இதனால் இணையத் தொடர்பு பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகம் கூறுகிறது.
உலகளாவிய இணையத் தொடர்புகளுடன் வியட்னாம், ஐந்து கடலடிக் கம்பிவடங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த ஆற்றல் 62 டிபிபிஎஸ் என்று நாட்டின் ஆகப்பெரிய இணையத் தொடர்பு சேவையை வழங்கும் எஃப்பிபிடி தரவுகள் தெரிவிக்கின்றன.