குழந்தைகளுக்கான தனியுரிமையைடிக்டாக் மீறிவிட்டதாக புகார்

1 mins read
f7896f4e-cc6d-4711-8c02-3f45f2697758
குழந்தைகளுக்கான தனியுரிமைகளை டிக்டாக் மீறியதாக சொல்லப்படுகிறது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: இவ்வாண்டின் பிற்பகுதியில் ‘டிக்டாக்’கின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் மீது பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குத் தொடுக்க அமெரிக்க நீதித் துறை ஆயத்தமாகி வருகிறது.

மத்திய வர்த்தக ஆணையத்தின் சார்பில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜூன் 20ஆம் தேதியன்று புளூம்பெர்க் நியூஸ் தெரிவித்தது.

டிக்டாக் தனது தரவுகளின் மூலம் அமெரிக்க வாடிக்கையாளர்களை தவறாக வழிகாட்டியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அதற்குப் பதிலாக குழந்தைகளுக்கான தனிப்பட்ட உரிமைகளை மீறியதாக அதன் மீது வழக்குத் தொடுக்கப்படும் என்று விவரமறிந்தவர்கள் தெரிவித்தனர்.

சீனாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் அதன் தாய் நிறுவனத்தின் ஊழியர்கள், அமெரிக்க வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் நிதி விவரங்களை பார்க்க முடியும் என்பதை டிக்டாக் தெரிவிக்காமல் மறுத்த புகாரும் உள்ளது.

ஆனால் இந்தப் புகாரை கைவிட அமெரிக்க நீதித் துறை திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மேலும் விவரங்களை அறிய ராய்ட்டர்ஸ் முற்பட்டபோது அமெரிக்க நீதித் துறை, மத்திய வர்த்தக ஆணையம், டிக்டாக் ஆகியவை உடனடியாக பதிலளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்