வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம், ரஷ்யாவில் செயல்படும் காஸ்பெர்ஸ்கி நிறுவனத்தின் புகழ்பெற்ற தீங்கு எதிர்ப்பு மென்பொருளுக்கு ஜூன் 20ஆம் அன்று தடை விதித்தது.
தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரிவு கூறியது.
‘காஸ்பெர்ஸ்கி’ அதன் மென்பொருளை அமெரிக்காவில் விற்கவோ, ஏற்கெனவே உள்ள மென்பொருளை புதுப்பிக்கவோ முடியாது.
ரஷ்யா தனது இணைய ஆற்றல் வல்லமையால் காஸ்பெர்ஸ்கியின் நடவடிக்கைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிட்டு செல்வாக்கு செலுத்த முடியும். இது, அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும் என்று அமெரிக்க வர்த்தகப் பிரிவின் செயலாளர் கினா ரெய்மோண்டோ தெரிவித்தார்.

