துப்பாக்கி வன்முறையைச் சுகாதார நெருக்கடியாக அறிவித்த அமெரிக்கத் தலைமை மருத்துவர்

துப்பாக்கி வன்முறையைச் சுகாதார நெருக்கடியாக அறிவித்த அமெரிக்கத் தலைமை மருத்துவர்

1 mins read
b4c2ef7d-038f-4cdc-909e-757093b0eba3
அமெரிக்கத் தலைமை மருத்துவர் டாக்டர் விவேக் மூர்த்தி. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி வன்முறைகளைப் பொதுச் சுகாதார நெருக்கடியாக அந்நாட்டுத் தலைமை மருத்துவர் டாக்டர் விவேக் மூர்த்தி செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) அறிவித்தார்.

அவற்றை ஒடுக்கப் பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளை, புகைபிடித்தல், போக்குவரத்து விதிமீறல் ஆகியவற்றிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ஒப்பிட்டு கூறி விவரித்தார்.

டாக்டர் மூர்த்தி உட்பட அவருக்குமுன் அமெரிக்காவின் தலைமை மருத்துவர்களாக இருந்த நான்கு பேர் துப்பாக்கிச் சூடு மரணங்களை அரசியல் கோணத்தில் பார்க்காமல் சுகாதார ரீதியில் பார்க்க வேண்டும் என்னும் கருத்தைப் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

அமெரிக்காவின் தேசிய துப்பாக்கிச் சங்கம் அந்நாட்டுத் தலைமை மருத்துவரின் இந்த நடவடிக்கைக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

கால் நூற்றாண்டு காலமாகத் துப்பாக்கி வன்முறை தொடர்பான ஆராய்ச்சிக்காக அந்நாட்டு அரசு அளித்துவந்த நிதியுதவியை ரத்து செய்யும் வகையில் அச்சங்கம் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்