ஹாங்காங் விமான நிலையம்: பயணிகள் திரவம், மின்னியல் பொருள்களைப் கைப்பெட்டியில் வைக்கலாம்

ஹாங்காங் விமான நிலையம்: பயணிகள் திரவம், மின்னியல் பொருள்களைப் கைப்பெட்டியில் வைக்கலாம்

1 mins read
923e9ab9-ae09-416a-9ecc-94afecb7f07c
ஹாங்காங் அனைத்துலக விமான நிலையம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹாங்காங்: ஹாங்காங் விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள் விரைவில் விமானத்தில் கையில் கொண்டு செல்லும் பெட்டிகளில் சிறிய அளவில் திரவம், மின்னியல் பொருள்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு பாதுகாப்புச் சாவடிகளைக் கடக்கலாம்.

அதனால் பயணிகள் கூடுதல் விரைவில் விமானத்திற்குச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் பாதுகாப்பு முறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது அதற்குக் காரணம்.

அடுத்த ஈராண்டுகளில் ஹாங்காங் விமான நிலையத்தில் 50 புதிய அறிவார்ந்த சோதனைச் சாவடிகளும் உடலை முழுமையாகச் சோதிக்கும் 32 கருவிகளும் கட்டங்கட்டமாக செயல்படுத்தப்படும். புதன்கிழமையன்று (ஜூன் 26) ஹாங்காங் அனைத்துலக விமான நிலையம் அதன் இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

முதலில், வரும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 2) விமான நிலையத்தின் ஒன்றாம் முனையத்தின் வடக்கு, தெற்கு மண்டபங்களில் நான்கு சோதனைச் சாவடிகள் பொருத்தப்படும்.

800 மில்லியன் ஹாங்காங் டாலர் (139 மில்லியன் வெள்ளி) செலவில் ஹாங்காங் விமான நிலையத்தில் இந்தப் பாதுகாப்பு மேம்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகளவில் அறிவார்ந்த சோதனை முறையை நடைமுறைப்படுத்தும் முதல் விமான நிலையம் என்ற பெருமை ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தைச் சேரவிருப்பதாக ஹாங்காங் விமான நிலைய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்டீவன் இயூ கூறினார் என்று சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் ஊடகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்