கெந்திங் மலையில் கவிழ்ந்த பேருந்து; சுற்றுப்பயணிகள் இருவர் மரணம்

கெந்திங் மலையில் கவிழ்ந்த பேருந்து; சுற்றுப்பயணிகள் இருவர் மரணம்

1 mins read
91adf5b3-a76a-4e07-a13d-553a0865b3eb
கெந்திங் மலையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தபோது பேருந்து கவிழ்ந்தது. - படம்: பாகாங் தீயணைப்பு, மீட்புத் துறை 
multi-img1 of 2

குவாந்தான்: மலேசியாவின் கெந்திங் மலையில் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் சீனாவைச் சேர்ந்த இரு சுற்றுப்பயணிகள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் ஜூன் 29ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

கெந்திங் மலையிலிருந்து அப்பேருந்து இறங்கிக்கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை 10.40 மணி அளவில் விபத்து நிகழ்ந்தபோது பேருந்தில் ஓட்டுநர் உட்பட 21 பேர் இருந்ததாக அறியப்படுகிறது.

அவர்களில் மூவர் மலேசியர்கள். மற்றவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஏழு பெண்களும் 11 ஆண்களும் அடங்குவர்.

தீயணைப்புப் படையைச் சேர்ந்த 20 அதிகாரிகள் சம்பவ இடத்தைக் காலை 10.57 மணி அளவில் சென்றடைந்ததாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பாகாங் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.

உயிரிழந்த இருவரும் தங்கள் இருக்கைகளில் மாட்டிக்கொண்டதாக நம்பப்படுகிறது. இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாகக் கூறப்படுகிறது.

பேருந்தில் இருந்த மற்ற 19 பேரும் காயமடைந்தனர். இருப்பினும், அவர்கள் அனைவரும் வாகனத்திலிருந்து வெளியேறினர்.

மீட்புப் பணிகள் தொடர்வதாக பெந்தோங் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்