தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருத்துவர்கள் போராட்டம்: பின்வாங்கியது தென்கொரியா

1 mins read
a08903a8-3e90-4b1c-a311-907e31ae174b
போராடும் பயிற்சி மருத்துவர்களுக்கு எதிராகக் கடந்த வியாழக்கிழமை தலைநகர் சோலில் தென்கொரிய நோயாளிகள் ஆலோசனைக் குழுக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின. - படம்: ஏஎஃப்பி

சோல்: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களின் உரிமத்தை ரத்து செய்யும் திட்டத்தைக் கைவிடுவதாக தென்கொரியா அறிவித்து உள்ளது.

இதுகுறித்து திங்கட்கிழமை (ஜூலை 8) செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் சுகாதார அமைச்சர் சோ கியூ-ஹோங், பயிற்சி மருத்துவர்கள் வேலைக்குத் திரும்பினாலும் திரும்பாவிட்டாலும் அவர்களின் மருத்துவர் உரிமத்தைப் பறிக்கும் திட்டத்தைக் கைவிட அரசாங்கம் முடிவு செய்து உள்ளது என்றார்.

மருத்துவச் சேவையில் தற்போது ஏற்பட்டு இருக்கும் பற்றாக்குறைக்கு முடிவுகாண்பது மிகவும் அவசரம் என்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 2,000 மாணவர்களை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிப்ரவரி மாதம் முதல் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், மருத்துவச் சேவைகள் முடங்கி உள்ளன.

மருத்துவ மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு முன்னர் சம்பளம் மற்றும் வேலைச் சூழலில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கை.

குறிப்புச் சொற்கள்