தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப் கொலை முயற்சி: 60,000 அமெரிக்க டாலர்களை எட்டிய பிட்காயின் விலை

1 mins read
2bb27adc-d1c7-44de-bbc2-8a8c78a3f136
படம்: - பிக்சாபே

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டார்.அவரின் வலதுகாதில் காயம் ஏற்பட்டுள்ளது. டிரம்பைச் சுட்டதாக நம்பப்படும் சந்தேக நபரை அமெரிக்க உளவுத்துறை சுட்டதில் அவர் மாண்டார்.

திரு டிரம்ப், நிலைமையைத் துரிதமாகக் கையாண்டதால் அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்ற ஊகங்கள் காட்டுத்தீ போல் பரவத் தொடங்கியுள்ளன.

இதனால், நீண்ட காலத்திற்குப் பின்பு கிரிப்டோகரன்சியான பிட்காயினின் விலை 60,000 அமெரிக்க டாலரை எட்டுமளவு உயர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்