கோலாலம்பூர்: மலேசியாவில் விரைவுச்சேவைப் பேருந்து நிறுவனங்களுக்கான டீசல் மானிய வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
மாதத்துக்கு மானியத்துடன் கூடிய 6,000 லிட்டர் டீசலை அவை வாங்கலாம் என்று அவர் கூறினார். இதற்கு முன்பு மாதத்துக்கு மானியத்துடன் கூடிய 2,880 லிட்டர் டீசல் மட்டுமே அந்த நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன.
“விரைவுச்சேவைப் பேருந்து நிறுவனங்களுக்கான டீசல் மானிய வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அவற்றின் செலவினங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க இது உதவும்,” என்று ஜூலை 16ஆம் தேதியன்று அமைச்சர் லோக் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மானியம் வழங்கப்பட்ட டீசல் திட்டத்தின்கீழ் லிட்டருக்கு 1.88 ரிங்கிட்டுக்கு டீசல் விற்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

