வாஷிங்டன்: தேர்தல் நிதித் திரட்டில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
அதிபர் வேட்பாளரான திரு பைடனும் அவரது குழுவினரும் பிரசாரத்தைத் தொடருவது என்று வெள்ளிக்கிழமை (ஜூன் 19) முடிவெடுத்தனர்.
ஆயினும், அவருக்கு ஆதரவான நிதித் திரட்டில் சுணக்கம் காணப்படுகிறது. உடல் தளர்ச்சி காரணமாக 81 வயது திரு பைடன் அதிபர் போட்டியில் இருந்து விலகாத வரை நிதி அளிக்கப்போவதில்லை என்பதை பெரிய கொடையாளர்கள் மறைமுகமாகத் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 5 தேர்தலில் திரு பைடன் வெல்வதற்கான சாத்தியம் குறைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், ஒருவேளை அவர் விலகினால் தற்போதைய துணை அதிபர் திருவாட்டி ஹாரிஸுக்கு அதிபர் வேட்பாளர் ஆவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், மசாசூசெட்ஸில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் நடத்திய நிதித் திரட்டில் நன்கொடையாளர்கள் தீவிர நாட்டம் காட்டியதாக செய்திகள் கூறின.