தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய எண்ணெய் முனையம் இருக்கும் கடற்பகுதிக்குள் நுழைந்த ‘செரேஸ் 1’ கப்பல்

1 mins read
0f028174-d873-4f6c-8e84-a67b107bd3dc
பெட்ரா பிராங்கா தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் செரேஸ் 1 கப்பலுடன் மோதி தீப்பிடித்து எரிந்த சிங்கப்பூர்க் கொடி ஏந்திய ‘ஹாஃப்னியா நைல்’, - படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: பெட்ரா பிராங்கா தீவுக்கு வடகிழக்கே ஏறத்தாழ 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் ஜூலை 19ஆம் தேதியன்று சிங்கப்பூர் கொடியேந்திய ‘ஹாஃப்னியா நைல்’ கப்பலுடன் மோதிய பெரிய எண்ணெய்க் கப்பலை மலேசியக் கடலோரக் காவல்படை ஜூலை 21ஆம் தேதியன்று வழிமறித்தது.

தீயை ஏற்படுத்திய விபத்து நிகழ்விடத்திலிருந்து சாவ் தொமே, பிரின்சிப்பே நாட்டுக் கொடியேந்திய ‘செரெஸ் I’ கப்பல் கிளம்பிவிட்டதாக கடலோரக் காவல்படை ஜூலை 20ஆம் தேதி கூறியிருந்தது.

அந்தக் இரு கப்பல்களும் தீப்பிடித்து எரிந்தபோது அவற்றில் இருந்த 36 சிப்பந்திகள் மீட்கப்பட்டனர்.

இதற்கிடையே, அக்கப்பல் ஜூலை 22ஆம் தேதி காலை மலேசியாவின் பெர்தாம் எண்ணெய் முனையம் இருக்கும் கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலேசியக் கடற்பகுதியில் இரு இழுவைப் படகுகள் இழுத்துச்செல்லும் நிலையில் அக்கப்பல் அதிகாரிகளின் கண்களில் பட்டதாக கடலோரக் காவல்படை ஜூலை 21ஆம் தேதி கூறியது.

அக்கப்பலும் இரண்டு இழுவைப் படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்