தாயாரிடம் உள்ள உயர்தர வைரங்களை ஒப்படைக்க ஜோ லோவுக்கு உத்தரவு

1 mins read
1f99962a-3373-4884-a12f-dc69f0ab66fe
அமெரிக்க, மலேசிய அதிகாரிகளால் ஜோ லோ தேடப்பட்டு வருகிறார். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ் கோப்புப்படம்

லாஸ் ஏஞ்சலிஸ்: 1எம்டிபி மோசடியின் ‘மூளை’ என்று கூறப்படும் ஜோ லோ என அழைக்கப்படும் லோ டேக் ஜோ, அவரது தாயாரிடம் உள்ள உயர்தர வைரங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜூலை 22ஆம் தேதியன்று லாஸ் ஏஞ்சலிஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

7.35 கேரட் வைர மோதிரத்தையும் 3 கேரட்டுக்கும் அதிகமான வைரத் தோடுகளையும் அவர் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மலேசியாவின் அரசாங்க முதலீட்டு நிதியான 1எம்டிபியிலிருந்து கையாடப்பட்ட பணத்தைக் கொண்டு அவை வாங்கப்பட்டவை என நீதிபதி தீர்ப்பளித்தார்.

மோதிரத்தின் விலை ஏறத்தாழ 1.17 மில்லியன் அமெரிக்க டாலர் (S$1.57 மில்லியன்).

தோடுகளின் விலை கிட்டத்தட்ட 628,000 அமெரிக்க டாலர்.

அவற்றை நியூயார்க்கைச் சேர்ந்த பிரபல வடிவமைப்பாளர் லொரேன் சுவாட்ஸ் வடிவமைத்தார்.

சுவார்ட் வடிவமைத்த கழுத்தணி, முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி, ரோஸ்மா மன்சுருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அமெரிக்க அரசாங்க வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

அந்தக் கழுத்தணியில் பெரிய இளஞ்சிவப்பு வைரம் பொருத்தப்பட்டிருந்ததாக அவர்கள் கூறினர்.

அதன் விலை 23 மில்லியன் அமெரிக்க டாலர்.

அமெரிக்க, மலேசிய அதிகாரிகளால் ஜோ லோ தேடப்பட்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்