டாக்கா: பங்ளாதேஷில் கடந்த சில நாள்களாக நடந்த ஆர்ப்பாட்டங்களை அடுத்து, கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,500க்கும் மேலாகிவிட்டது.
இந்தத் தகவலை ஏஎஃப்பி செய்தி நிறுவனம் ஜூலை 23ஆம் தேதியன்று வெளியிட்டது.
அரசாங்கப் பணிகளுக்கான இட ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
ஆர்ப்பாட்டங்களின்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
வன்முறைச் சம்பவங்கள் காரணமாக குறைந்தது 174 பேர் மாண்டனர். மாண்டவர்களில் பல காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்களை முறியடிக்க பங்ளாதேஷில் ஊரடங்கு விதிக்கப்பட்டது.
அத்துடன், இணையச் சேவை முடக்கப்பட்டது.
நாடெங்கும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

