டாக்கா: பங்ளாதேஷில் அரசாங்க வேலைகளுக்கான இட ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து அந்நாட்டு மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்கு வந்தன.
இதையடுத்து, பங்ளாதேஷில் இணையச் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது.
அரசாங்க வேலைகளுக்கான இட ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து ஜூன் மாதம் அந்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
அவை படிப்படியாக பங்ளாதேஷ் முழுவதும் பரவின.
ஆர்ப்பாட்டங்களின்போது மாணவர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே மிகக் கடுமையான மோதல் ஏற்பட்டது.
வன்முறைச் சம்பவங்கள் காரணமாக ஜூலை மாதம் ஏறத்தாழ 150 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை நிறுத்திக்கொண்டதை அடுத்து, இணையச் சேவை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக பங்ளாதேஷ் வெளியுறவு அமைச்சு ஜூலை 28ஆம் தேதியன்று தெரிவித்தது.
ஆர்ப்பாட்டக்காரர்களை இரும்புக்கரம் கொண்டு பங்ளாதேஷ் அரசாங்கம் முடக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து ஐநா, அனைத்துலக மனித உரிமை அமைப்புகள், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை அதிருப்திக் குரல் எழுப்பின.
தொடர்புடைய செய்திகள்
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த பங்ளாதேஷ் மாணவர்களுக்கு இருக்கும் உரிமை கட்டிக்காக்கப்பட வேண்டும் என அவை வலியுறுத்தின.