இளைய சகோதரர்களை வைத்துக்கொண்டு கார் ஓட்டிய 12 வயது மலேசிய சிறுவன்; காவல்துறை விசாரணை

2 mins read
8152c8d3-eb50-4b03-9688-a365f20c21fd
சிறுவன் கார் ஓட்டிச் சென்றைக் காட்டும் 90 வினாடிக் காணொளியை 1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்தனர். சிறுவன் கார் ஓட்டியபோது அவனது இரண்டு இளைய சகோதரர்களும் காரில் இருந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு வார் அணியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. - படங்கள்: எக்ஸ் தளம்

பூச்சோங்: 12 வயது மலேசிய சிறுவன் ஒருவன் தமது இளைய சகோ[Ϟ]தரர்களை வைத்துக்கொண்டு கார் ஓட்டியதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்ததை அடுத்து, அதுகுறித்து அந்நாட்டுக் காவல்துறை விசாரணை நடத்துகிறது.

சிறுவனின் இந்த அபாயகரமான செயல் குறித்து அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.

ஜூலை 29ஆம் தேதியன்று சமூக ஊடகத்தில் பதவேற்றம் செய்யப்பட்ட அந்த 90 வினாடிக் காணொளியை 1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்தனர்.

காரில் இருந்த சிறுவர்கள் பாதுகாப்பு வார் அணியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

சிறுவனின் செயல் குறித்து அவனது தந்தையிடம் ஜூலை 30ஆம் தேதியன்று பேசியதாக காவல்துறையினர் கூறினர்.

ஜூலை 29ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் காணொளி குறித்து தகவல் கிடைத்ததாக சிபாங் காவல்துறைத் தலைவர் வான் கமாருல் வான் யூசோஃப் தெரிவித்தார்.

ஜூலை 28ஆம் தேதி இரவு 8 மணி அளவில் சிலாங்கூர் மாநிலத்தின் பூச்சோங் நகரில் உள்ள குடியிருப்புப் பேட்டை ஒன்றில் அந்தச் சிறுவன் கார் ஓட்டியதாக அவர் கூறினார்.

அந்தச் சிறுவன் கார் ஓட்டிச் சென்றபோது அதில் அவனது இரண்டு இளைய சகோதரர்களும் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிறுவனின் சகோதரர்களுக்கு ஆறு மற்றும் நான்கு வயது.

அந்தக் குடியிருப்பு வட்டாரத்தைச் சுற்றி சிறுவன் கார் ஓட்டியதாகத் தெரிய வந்துள்ளது.

அந்த கார் சிறுவனின் தந்தைக்குச் சொந்தமானது.

இந்நிலையில், ஜூலை 29ஆம் [Ϟ]தேதி இரவு 11 மணிக்குத் தமது பிள்ளைகளுடன் சிறுவனின் தந்தை, சிபாங் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கத்துறை அலுவலகத்துக்குச் சென்று வாக்குமூலம் தந்தார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்