ரஷ்யா: உக்ரேன் மிகப் பெரிய தாக்குதல் நடத்தியது

1 mins read
284c18d7-e9b1-4940-bbfb-9ebf70198be5
உக்ரேனியத் தாக்குதலால் நிலைகுலைந்துக் காணப்பட்ட வீடுகள். - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: ரஷ்யாவின் லிபெட்ஸ்க் பகுதியைக் குறிவைத்து உக்ரேன் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியதாக அப்பகுதியின் ஆளுநர் இகோர் ஆர்ட்டமோனோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்குள் உக்ரேன் ஆளில்லா வானூர்திகளை அனுப்பியதாகவும் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததாகவும் மின்சாரத் தடை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யா விமானப் படை முகாமுக்கு அருகில் இருக்கும் நான்கு கிராமங்களிலிருந்து கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

லிபெட்ஸ்க் மாவட்டத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்