அமைச்சர் வழுக்கி விழுந்ததையடுத்து கோலாலம்பூர் விமான நிலையம் நடவடிக்கை

அமைச்சர் வழுக்கி விழுந்ததையடுத்து கோலாலம்பூர் விமான நிலையம் நடவடிக்கை

படம்: ஜமாவி ஜஃபார்/ஃபேஸ்புக்

24 Nov 2026 - 6:55 pm

1 mins read

சிப்பாங்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கேஎல்ஐஏ) முனையம் ஒன்றில் சாபா மாநில வேளாண்மை, மீன்வளம், உணவுத் தொழில்துறை அமைச்சர் ஜமாவி ஜஃபார் வழுக்கி விழுந்து தலையில் காயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மலேசியா விமானநிலையம் நிறுவனம் உடனடிச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நவம்பர் 23ஆம் தேதி கேஎல்ஐஏ முக்கியப் பிரமுகர்களுக்கான அறையில் கழிப்பறையில் வழுக்கி விழுந்ததில் அமைச்சர் ஜமாவி ஜஃபாருக்குத் தலையில் காயம் ஏற்பட்டுத் தையல் போடப்பட்டது.

அச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் பாதிக்கப்பட்டவரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திங்கட்கிழமை (நவம்பர் 23) வெளியிட்ட அறிக்கையில் விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதி முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, வசதியின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான சீரமைப்பு நடவடிக்கைகள் முற்றிலுமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அது கூறியது.

விமான நிலையத்தின் அனைத்து வசதிகளிலும் பயனீட்டாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான, அமைதியான, வசதியான சூழலைப் பேணுவதில் கேஎல்ஐஏ தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்