ஜப்பானியப் போர் நினைவிடத்திற்குப் பிரதமர் தக்காய்ச்சி காணிக்கை அனுப்பியதற்குக் கடும் எதிர்ப்பு

ஜப்பானியப் போர் நினைவிடத்திற்குப் பிரதமர் தக்காய்ச்சி காணிக்கை அனுப்பியதற்குக் கடும் எதிர்ப்பு

படம்: ஏஎஃப்பி

19 Oct 2026 - 4:09 pm

1 mins read

தோக்கியோ: ஜப்பானியப் போரில் மாண்டவர்களுக்காகவும் குற்றஞ்சாட்டப்பட்ட போர்க் குற்றவாளிகளுக்காகவும் தலைநகர் தோக்கியோவில் அமைக்கப்பட்டுள்ள யசுகுனி நினைவிடத்திற்கு அந்நாட்டுப் பிரதமர் சானே தக்காய்ச்சி காணிக்கைப் பணம் அனுப்பியுள்ளார்.

அங்கு நடைபெறும் மூன்று நாள் இலையுதிர்கால விழாவையொட்டி திங்கட்கிழமை (அக்டோபர் 19) அவர் இக்காணிக்கையைத் தமது சொந்தப் பணத்திலிருந்து அனுப்பினார். முன்னதாக, அக்டோபர் 17ஆம் தேதி அவர் சிறப்புப் புனிதமரக் கிளை ஒன்றையும் காணிக்கையாக அனுப்பியிருந்தார்.

தீவிர வலதுசாரி நிலைப்பாட்டைக் கொண்ட திருவாட்டி தக்காய்ச்சி, இந்த விழாவின்போது நேரடியாக நினைவிடத்திற்குச் செல்வதைத் தவிர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜப்பானிய நில அமைச்சர் தட்சுனோரி இபயாஷி உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஆக்கிரமிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சீனா, தென்கொரியா ஆகிய ஆசிய நாடுகள், ஜப்பானியத் தலைவர்களின் இந்த நடவடிக்கைக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துவருகின்றன.

மேலும், தைவானைச் சீனா தனது எல்லைக்குட்பட்ட பகுதி எனக் கூறிவரும் வேளையில், தைவான் தாக்கப்பட்டால் ஜப்பான் பதிலடி கொடுக்கும் என்று திருவாட்டி தக்காய்ச்சி 2025ஆம் ஆண்டில் கூறியிருந்தார். அதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்கெனவே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஜப்பான்பிரதமர்போர் விமானம்நினைவிடம்