தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்து துறைகளிலும் வலுவான பங்காளித்துவம்: பிரான்ஸ், மலேசியா

2 mins read
2eabf842-cd04-4272-87a8-38dafd079786
(இடது) மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் (வலது) பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் எலுசி அரண்மனையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். - படம்: ஏஃப்பி

பாரிஸ்: பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் வருகை வெற்றிரமான ஒன்று எனக் கூறியுள்ளார். இரு தலைவர்களும் பல துறைகளில் பங்காளித்துவத்தைப் புதுப்பித்தனர்.

பிரெஞ்சு பிரதமர் ஃபிரான்சுவா பெய்ரு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் உயர்மட்ட கூட்டங்களில் திரு அன்வார் கலந்துகொண்டதைச் சுட்டிய திரு மெக்ரோன், சொர்போன் பல்கலைக்கழகத்தில் திரு அன்வார் ஆற்றிய முக்கிய உரையையும் சமூக, வர்த்தகத் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசியதையும் குறிப்பிட்டார்.

இருநாட்டுப் பொருளியல்களுக்கும் இடையிலான நல்லுறவும் இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான, விரிவான ஒத்துழைப்பும் முக்கியம் என்று திரு மெக்ரோன் வலியுறுத்தினார்.

முக்கிய கனிம வளங்களையும் பூமியில் உள்ள அரிய வகை கனிமவளங்கள் தொடர்பில் கேர்ஸ்டர் (Carester) நிறுவனத்துடன் மலேசியா செய்துகொண்ட புதிய திட்டத்தை அவர் குறிப்பிட்டார்.

“தென்கிழக்காசியாவில் சிவில் அணுச்சக்தி உள்பட வட்டார மின்சார இணைப்புக்கான எங்கள் ஆதரவை நான் மறுவுறுதிப்படுத்தினேன்,” என்றும் திரு மெக்ரோன் சொன்னார்.

“கலைஞர்கள், ஆய்வாளர்கள், கல்விமான்கள், மாணவர்கள் ஆகியோருக்கு இடையே பரிமாற்றத் தொடர்புகளையும் நான் குறிப்பிடவேண்டும்,” என்ற திரு மெக்ரோன், அவர்கள் பிரான்ஸ்-மலேசிய உறவுக்கு உயிர்கொடுப்பதாக வருணித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மனித இணைப்பை வலுப்படுத்தும் புதிய ஒப்பந்தங்கள் குறித்து ஆராயப்படுவதாகவும் அவர் சொன்னார்.

தனியார் துறையில் உள்ள ஒத்துழைப்பு காரணமாக அரசாங்கங்களுக்கு இடையிலான ஏற்பாடுகளும் அமைச்சர்களுக்கு இடையிலான கொள்கைப் பறிமாற்றங்களும் உயர் மட்டத்தில் தொடர வேண்டும் என்றும் திரு அன்வார் கூறினார்.

“கல்வி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், மின்னிலக்கப் பொறியியல் ஆகிய துறைகளில் எங்கள் மாணவர்களில் பலர் பயிற்சி பெற்றதன் மூலம் நாங்கள் பெரிய அளவில் பயனடைந்துள்ளோம்,” என்றார் அவர்.

மலேசியாவுக்கு பிரெஞ்சு மாணவர்கள் வரத் தொடங்கியிருப்பதைச் சுட்டிய திரு அன்வார், பிரான்ஸிலிருந்து வரும் மாணவர்கள், சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததாகக் குறிப்பிட்டார்.

- படம்: ராய்ட்டர்ஸ்
குறிப்புச் சொற்கள்