ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் பினாங்கு மற்றும் கெடா மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) காலை பலத்த காற்று வீசியதில் வீடுகளின் கூரைகளில் பெயர்ந்தன, மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மலாக்கா நீரிணையில் உருவாகிய பலத்த காற்று பினாங்குத் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள பாலிக் புலாவை முதலில் அடைந்தது.
அதிகாலை 4 மணி அளவில் பலத்த காற்று கரையைக் கடந்தது.
செயற்கைகோள் படங்களைக் கொண்டு வானிலைச் செயலிகள் இப்படங்களைக் காட்டின.
மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் சீறிய காற்று பினாங்கிலிருந்து கெடாவின் கூலிம், சுங்கை பட்டானி ஆகிய நகரங்களை அடைந்தது.
அதிகாலை 4.30 மணி அளவில் வீடு ஒன்றின் கூரை கார்கள் மீது விழுந்ததாக பினாங்குத் தீவு நகர மன்றத்தின் மேயர் ஏ. ராஜேந்திரன் தெரிவித்தார்.
இதில் ஏழு வாகனங்கள் சேதமடைந்ததாக அவர் கூறினார்.