பிரான்சில் உயர்நிலை பள்ளி ஒன்றில் பெண் ஆசிரியர் ஒருவரை மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
சம்பவம் இன்று காலை (பிப்ரவரி 22) செயிண்ட் ஜீன் டேலஸ் வட்டாரத்தில் நடந்தது.
மாண்ட ஆசிரியர் ஷ்பேனிஸ் மொழி கற்றுக்கொடுப்பவர். அவர் 50 வயதுகளில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர் கைது செய்யப்பட்டு அதிகாரிகளின் விசாரணையில் உள்ளார்.
ஆசிரியர் பாடம் கற்றுத்தரும் போது மாணவர் ஆசிரியரைத் தாக்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு பிரெஞ்சு கல்வி அமைச்சர் சென்று ஆறுதல் கூறினார்.

