2010க்கும் 2020க்கும் இடையே உலகில் ஆக வேகமாக வளர்ந்துவரும் சமயங்களில் இஸ்லாம் உருவெடுத்துள்ளது. அதே காலகட்டத்தில், உலகின் ஆகப் பெரும் சமயமான கிறிஸ்துவத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை, 1.8 விழுக்காடு புள்ளிகள் குறைந்து 28.8 விழுக்காடு ஆனதாக பியூ ஆய்வு மையத்தின் கருத்தாய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது.
உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்திற்கு நிகராக இந்துக்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் இருப்பதாகவும் அந்தக் கருத்தாய்வு குறிப்பிடுகிறது. இந்து மக்கள் தொகையில் 95 விழுக்காட்டினர் இந்தியாவில் உள்ளனர்.
2020ல் வெளிவந்த விவரங்களின்படி இந்துக்களின் விகிதம் 79 விழுக்காடாக இருந்தது. 2010ல் அது 80 விழுக்காடாக இருந்தது என்றும் உலகளாவிய சமயச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றிய அந்தக் கருத்தாய்வு குறிப்பிடுகிறது.
சமயச்சார்பு அற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அத்தகையோரின் எண்ணிக்கை 270 மில்லியன் உயர்ந்து, 1.9 பில்லியனை எட்டியுள்ளது.
மற்ற சமயங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை உயர்வைக் காட்டிலும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உயர்வு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது. தற்போது உலக மக்கள் தொகையில் 25.6 விழுக்காட்டினர் முஸ்லிம்கள்.
உலக மக்களில் 2020ஆத் ஆண்டு நிலவரப்படி இந்துக்களின் விகிதம், 14.9 விழுக்காடாக உள்ளது. இது, 2010ல் 15 விழுக்காடாக இருந்தது.
2010 முதல் 2020 வரை இந்துக்களின் எண்ணிக்கை 12 விழுக்காடாகக் கூடி ஏறத்தாழ 1.2 பில்லியனை எட்டியுள்ளது.
2010ல் அதிகப் பிள்ளைகள் கொண்டுள்ள சமயத்தவர்களாக முஸ்லிம்கள் இருப்பதாகக் கருத்தாய்வு குறிப்பிடுகிறது. உலக முஸ்லிம்களில் 35 விழுக்காட்டினர் 15 வயதுக்கும் குறைவானவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
இந்துக்களில் 31 விழுக்காட்டினர் 15 வயதுக்கும் குறைவானவர்கள்.