அனைத்துலக வின்வெளி நிலையத்தில் தனிமையில் வாடும் விஞ்ஞானிகளுக்கு அவ்வப்போது இயற்கையழகு அவர்களுக்கு ஆறுதல் தருவதுண்டு.
பூமியின் வடதிசையில் ஒளிரும் வியக்கத்தக்க இவ்வழகு அவர்களை மெய் மறக்கச் செய்துள்ளது.
அதை அவர்கள் மட்டும் கண்டு ரசிக்காமல் அனைத்துலக வின்வெளி நிலையத்தில் இருந்து அக்காட்சியை பூமிக்கு அனுப்பியுள்ளனர்.
அதனை அமெரிக்காவின் நாசா சமூகஊடகங்களில் வெளியிட்டுள்ளது.
பூமியின் வடக்கு திசையில் ஒளியின் பிரகாசத்தை பார்க்க ஐரோப்பாவிற்குப் பலரும் செல்வார்கள். ஆனால் விண்ணில் இருந்து இக்காட்சியை ஒரு சிலரே பார்க்கமுடியும் என்றும் விஞ்ஞானிகள் பெருமைகொள்கின்றனர்.