விண்வெளிக்கு மூன்றாவது முறையாகச் சென்றுள்ளார் இந்திய வம்சாவளியான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 58.
இவர் அந்தரத்தில் மிதந்தவாறு ஆட்டம் போடும் காணொளி ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.
போயிங் நிறுவனம் வடிவமைத்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் இவரும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் ஜூன் 5ஆம் தேதி அனைத்துலக விண்வெளி மையத்தை நோக்கிச் சென்றனர்.
இருவரும் 25 மணிநேரப் பயணத்திற்குப் பிறகு ஜூன் 6ஆம் தேதி மையத்தை அடைந்தனர்.
அதில் ஒருவார காலம் தங்கி ஆய்வு மேற்கொண்டு ஜூலை 14ஆம் தேதி பூமிக்குத் திரும்புவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் சக விண்வெளி வீரர்களுடன் மகிழ்ச்சியாக ஆட்டம் போடுவதைக் காட்டும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தான் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் தமது கலாசாரத்தோடு தொடர்புடைய பொருள்களை அல்லது உணவை அவர் தன்னுடன் கொண்டுசெல்வது வழக்கம் என்று கூறி வருகிறார் சுனிதா.
இவ்வாறு பகவத் கீதை, ‘சமோசா’ போன்றவற்றைக் கொண்டு சென்றுள்ளாராம்.

