விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம் அமெரிக்காவின் நாசா அமைப்புடன் இணைந்து விண்கலத்தைப் பாய்ச்சி உள்ளது.
கிட்டத்தட்ட 9 மாதங்களாக விண்வெளியில் தவித்து வரும் அவர்களை மீட்க சனிக்கிழமை (மார்ச் 15) காலை அமெரிக்காவிலிருந்து விண்கலம் புறப்பட்டது.
விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) பிற்பகல் நேரத்தில் சென்றடையும் என்று கூறப்படுகிறது.
அனைத்துலக விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பத்து நாள்கள் மட்டுமே தங்கத் திட்டமிட்டுக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்றனர்.
ஆனால், அவர்கள் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக, அவர்கள் ஒன்பது மாதங்களுக்கும் மேலாகத் தங்க நேரிட்டது.
விண்வெளி நிலையத்திற்குப் புதிய குழுவினர் சென்ற இரண்டு நாள்களில் சுனிதாவும் புட்ச்சும் பூமிக்குத் தங்களது பயணத்தை மேற்கொள்வார்கள்.