ஆஸ்திரேலியாவில் அதிரடி வரிச் சீர்திருத்தம்: நாடாளுமன்றக் கீழவையில் மசோதா நிறைவேற்றம்

ஆஸ்திரேலியாவில் அதிரடி வரிச் சீர்திருத்தம்: நாடாளுமன்றக் கீழவையில் மசோதா நிறைவேற்றம்

1 mins read
77d0018a-41cf-4cfe-8a56-1a6c22da6ea4
மக்களுக்கு வீடுகள் எளிதில் கிடைக்கும் வகையில், சொத்து முதலீட்டாளர்களுக்கான வரிச் சலுகைகளைக் குறைப்பதையும் மூலதன லாபத் தள்ளுபடியை ரத்து செய்வதையும் இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட மிக முக்கிய மற்றும் மிகப் பெரிய வரிச் சீர்திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றக் கீழவையில் வியாழக்கிழமை (ஜூன் 4) நிறைவேற்றப்பட்டது.

மக்களுக்கு வீடுகள் எளிதில் கிடைக்கும் வகையில், சொத்து முதலீட்டாளர்களுக்கான வரிச் சலுகைகளைக் குறைப்பதையும் மூலதன லாபத் தள்ளுபடியை ரத்து செய்வதையும் இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகள், சில சுயேச்சை உறுப்பினர்கள் ஆகியோரின் சட்டத் திருத்த முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இம்மாற்றுத் திட்டம் 94-48 என்ற வாக்குகள் கணக்கில் கீழவையில் நிறைவேறியது.

இந்தப் புதிய சீர்திருத்தத்தின்படி, ஓர் ஆண்டுக்கும் மேலாக வைத்திருக்கும் சொத்துகளுக்கான 50 விழுக்காடு மூலதன ஆதாயத் தள்ளுபடி முறை நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பணவீக்கத்துக்கு ஏற்பச் சரிசெய்யப்பட்ட லாபத்தின் மீது வரி விதிக்கப்படும். மேலும், நிகர மூலதன லாபங்கள் மீதான 30 விழுக்காடு குறைந்தபட்ச வரி விதிப்பு 2027ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. முதலீட்டாளர்கள் தங்களது சொத்து நட்டங்களை வரிக்குரிய வருமானத்துக்கு ஈடாகக் காட்டும் ‘நெகட்டிவ் கியரிங்’ சலுகை இனி புதிதாகக் கட்டப்படும் வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் கட்டுப்படுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்