தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமான இறக்கையின்மீது படம் எடுத்துக்கொண்ட சிப்பந்திகள்

1 mins read
9b57c3e4-02fc-4ae1-ba16-432fe67001fb
இணையத்தில் பரவிய காணொளிகளில் விமானத்தின் இறக்கையின்மீது சிப்பந்திகள் நடனமாடுவதுபோலவும் உடற்கட்டழகுப் பயிற்சி செய்வதுபோலவும் காணப்பட்டனர். - படம்: பிரேக்கிங் ஏவியேஷன் நியூஸ் அண்ட் வீடியோஸ்

சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்சிற்குச் சொந்தமான போயிங் 777 ரக விமானத்தின் இறக்கையின்மீது அதன் சிப்பந்திகள் புகைப்படம் எடுத்துக்கொண்டதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

அர்ஜெண்டினாவின் நகரில் அந்த விமானம் நின்றிருந்தபோது அச்சிப்பந்திகள் அவ்வாறு படமெடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அச்சம்பவம் தொடர்பான காணொளி, ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இணையத்தில் பரவியது.

அதில் பெண் சிப்பந்தி ஒருவர் விமான இறக்கையின்மீது நடனமாடுவதும் புகைப்படம் எடுத்துக்கொள்வதும் காணப்படுகிறது.

பின்னர் அவருடன் சேர்ந்துகொண்ட ஆடவர் ஒருவர் உடற்கட்டழகுப் பயிற்சி செய்வதுபோல் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவர் விமானச் சிப்பந்திகள் குழுவின் தலைவர் என்று தெரியவந்தது.

ஆகஸ்ட் 16ஆம் தேதி விமானம் புறப்படச் சிறிது நேரம் முன்னதாக அச்சம்பவம் நிகழ்ந்ததாக அமெரிக்க ஊடகமான இன்சைடர் தெரிவித்தது.

சிப்பந்திகள் படமெடுத்துக்கொண்டபோது விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என்றும் கூறப்பட்டது.

“சிப்பந்திகளின் செயல், சகித்துக்கொள்ள முடியாத நடவடிக்கை. வேடிக்கைபோல் தோன்றினாலும் அது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய செயல்,” என்று விமான நிறுவனத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

விமானச் சிப்பந்திகள் மீதான பயணிகளின் நம்பிக்கையை இச்செயல் குலைக்கக்கூடும் என்பதைக் கவனிப்பாளர்கள் சுட்டினர்.

குறிப்புச் சொற்கள்