உருண்டை வடிவிலான இடிபாடுகள்; ஒன்பது கடற்கரைகளை மூடிய சிட்னி

1 mins read
d5f7cc73-b0c1-4fae-a0a2-ad3a74470c55
கரை ஒதுங்கிய இடிபாடுகளில் பெரும்பாலானவை கோலிக் குண்டு அளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உருண்டை வடிவிலான இடிபாடுகள் கரை ஒதுங்கியதை அடுத்து, ஒன்பது கடற்கரைகளை அந்நகரம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) மூடியது.

கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு சிட்னியில் உள்ள கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

இந்நிலையில், கடற்கரையில் வெள்ளை மற்றும் சாம்பல் நிற உருண்டை வடிவிலான பொருள்கள் கரை ஒதுங்கின.

அவை என்னவென்று தெரியாமல் மர்மமாக உள்ளது என அதிகாரிகள் கூறினர்.

அவற்றில் பெரும்பாலானவை கோலிக்குண்டு அளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த மர்மப் பொருளை பத்திரமாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்