சிட்னி - நியூகாசல் இடையிலான அதிவேக ரயில் திட்டம்

சிட்னி - நியூகாசல் இடையிலான அதிவேக ரயில் திட்டம்

1 mins read
9491cecb-93c0-48d0-b237-3aa14a9ee729
அடுத்த 50 ஆண்டுகளில் ஆஸ்திரேலியப் பொருளியலுக்கு ஏறத்தாழ $250 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை புதிய அதிவேக ரயில் திட்டம் ஈட்டித் தரும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கேன்பெரா: சிட்னி மற்றும் நியூகாசல் நகரங்களுக்கு இடையே 61.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அதிவேக ரயில் திட்டத்தை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது. இது அந்நாட்டின் கூட்டரசு வரலாற்றிலேயே ஆக விலை உயர்ந்த உள்கட்டமைப்புத் திட்டமாக அமையவுள்ளது.

சிட்னி மற்றும் நியூகாசல் இடையிலான பயணத்தை ஒரு மணிநேரமாக இது குறைக்கும். மேலும், சென்ட்ரல் கோஸ்ட் பகுதிக்கான பயண நேரம் 30 நிமிடங்களாக குறையும்.

இத்திட்டம் 99,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 50 ஆண்டுகளில் ஆஸ்திரேலியப் பொருளியலுக்கு ஏறத்தாழ $250 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை புதிய அதிவேக ரயில் திட்டம் ஈட்டித் தரும்.

தற்போது, சிட்னி மற்றும் நியூகாசல் இடையிலான ரயில் பயணத்திற்குக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் எடுக்கிறது.

இதற்கானக் கட்டுமானப் பணிகள் 2027ஆம் ஆண்டு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முழுத் திட்டமும் 2042ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்