சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் புதிய அனைத்துலக விமான நிலையத்தில் அதிக விமானச் சேவைகள் இயங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி நகரின் மையப் பகுதியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலையிவ் அமைந்துள்ள மேற்கு சிட்னி அனைத்துலக விமான நிலையம் (Western Sydney International) 5.6 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (5 பில்லியன் வெள்ளி) செலவில் கட்டப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 25ஆம் தேதி அது தனது முதல் விமானச் சேவையைக் கையாளவிருக்கிறது.
எனினும், குறைவான விமானச் சேவைகளையே அந்த விமான நிலையம் ஈர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களில் தினமும் அது 12 அல்லது அதற்கும் குறைவான விமானச் சேவைகளைக் கையாளத் திட்டமிட்டிருப்பதாக விமானத்துறைத் தரவு நிறுவனமான சிரியம் தெரிவித்துள்ளது.
