துருக்கியில் அகதியாக இருந்த ஆயிரக்கணக்கான சிரியா மக்கள் மீண்டும் சிரியாவிற்குச் செல்கின்றனர்

துருக்கியில் அகதியாக இருந்த ஆயிரக்கணக்கான சிரியா மக்கள் மீண்டும் சிரியாவிற்குச் செல்கின்றனர்

1 mins read
be537cf5-1ed5-4095-b84f-213ed332ebaf
படம்: நியூயார்க் டைம்ஸ் -

நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள துருக்கியில் இருந்து ஆயிரக்கணக்கான சிரியா அகதிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு மீண்டும் செல்கின்றனர்.

இரு நாடுகளின் எல்லைகளில் அம்மக்கள் காத்திருக்கின்றனர்.

நிலநடுக்கப் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் வரை சிரியா அகதிகளை அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்லும்படி துருக்கி கேட்டுக்கொண்டது.

கிட்டத்தட்ட மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர்களை மீண்டும் துருக்கிக்குள் வருமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

உள்நாட்டுப் போர், நிலநடுக்கம் என பலப் பிரச்சினைகள் உள்ள சிரியாவிற்குள் மீண்டும் செல்வதை எண்ணி மக்கள் கவலையில் ஆழ்ந்திருந்தனர்.

துருக்கியில் ஏறத்தாழ 3.7 மில்லியன் சிரியா அகதிகள் உள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 40,000-க்கும் அதிகமானோர் மாண்டனர்.