தைவானின் முன்னாள் துணைப் பிரதமரைத் தடுத்துவைக்க உத்தரவு

தைவானின் முன்னாள் துணைப் பிரதமரைத் தடுத்துவைக்க உத்தரவு

1 mins read
4ff86d66-1204-446c-ae65-c720ebf68b07
வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களுடன் கூட்டுச்சதியில் ஈடுபடும் சாத்தியம் உள்ளதால், செங் வென் சான் தடுத்துவைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் ஒன்று கூறியது. - படம்: இன்ஸ்டகிராம்

தைப்பேய்: ஊழலுக்காக விசாரிக்கப்படும் வேளையில், முன்னாள் துணைப் பிரதமர் செங் வென் சான் தடுத்துவைக்கப்பட வேண்டும் என்று தைவானிய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

செங் வென் சான் 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2024ஆம் ஆண்டு மே வரை சாய் நிர்வாகத்தில் துணைப் பிரதமராக இருந்தார்.

வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களுடன் கூட்டுச்சதியில் ஈடுபடும் சாத்தியம் உள்ளதால், செங் வென் சான் தடுத்துவைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் ஒன்று கூறியது.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பெருங்குற்றங்கள் சம்பந்தப்பட்டவை என்பதால், அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்லும் அபாயமும் இருப்பதாக நீதிமன்றம் சொன்னது.

அரசாங்கத்தில் தமது பதவியைப் பயன்படுத்தி லஞ்சம் பெற்றதாக செங் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக அவருக்கு இரு முறை பிணை வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், இரு முறையும் வழக்கறிஞர்கள் அதற்கு எதிராக மேல் முறையீடு செய்தனர்.

செங், ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சியில் மூத்த உறுப்பினராக உள்ளார். அவர் உத்தேச அதிபர் தேர்தல் போட்டியாளர் என்றும் சிலர் கருதுகின்றனர்.

அவர் 2014ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுவரை தவ்யுவென் நகரின் மேயராகச் செயல்பட்டார்.

குறிப்புச் சொற்கள்