கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு தைவான் அதன் சுற்றுப்பயணத்துறையைக் கைதூக்கிவிட ஆதரவளிக்கும் விதமாக, 500,000 சுற்றுப்பயணிகளுக்கு ரொக்க ஊக்குவிப்பு அல்லது சலுகைகளை வழங்கவிருக்கிறது.
தலா NT$5,000 (S$220) மதிப்புடைய இந்த ஊக்குவிப்புத் தொகை, வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஈர்க்க NT$5.3 பில்லியன் தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (பிப்ரவரி 23) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊக்குவிப்பைப் பெறுவதற்கு தகுதிக்கூறுகள் உள்ளனவா அல்லது இதைப் பெற சுற்றுப்பயணிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது பற்றிய விவரங்கள் வழங்கப்படவில்லை.
எனினும், இந்த ஊக்குவிப்புத் தொகை பயணிகளின் வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிடப்படலாம், அல்லது தங்குமிடச் செலவுகளுக்குச் சலுகைகளாக வழங்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


